Sunday, January 1, 2017

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க


"சக மனிதர்களின் குறைகளைப் பேசாமல் நம்முடைய நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்."(வி.சி.வில்வம்).

ஒரு சாமானிய நாயகனின் பெயர் சரவணன், நாயகியின் பெயர் கோமதி. நாயகன் பெரியாரிய சிந்தனையாளர். நூல்கள் மீது தீராக் காதலன். நாயகி பிறக்கும்போது சில இருதய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர். தொடர் சிகிச்சைகள் பெற்றும் சரியாகவில்லையென கைவிடப்படுகிறார்.

நாயகன் நாயகி நிலையறிந்து உதவ முன்வந்து திருச்சி, மதுரை, சென்னையென பல ஊர்களின் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார். இப்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஊர் ஊராகச் சுற்றுவதாக ஊராரும் உறவுகளும் தவறாக எண்ணி பிரச்சினை செய்கிறார்கள். (நம் சமூகம் அப்படித்தானே...அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை காண்பதில்தான் ஆர்வமாக இருப்பர்...தன் முதுகில் இருக்கும் அழுக்கினை சரிசெய்வதேயில்லை.) இங்கு நிற்க.

என் விசயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். புது வருசத்தின் முதல் நாளில் புத்தக வாசிப்போடு துவங்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்படிதான் ஒரு நூலை இன்று வாசிக்கத் துவங்கினேன்...நல்லதொரு துவக்கமாக அமைந்துவிட்டது. ஒரு கட்டுரை மட்டுமே இப்போது வாசித்து முடித்தேன். இன்னும் 29 கட்டுரைகள் இருக்கிறது இந்நூலில். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியீடு கண்ட நூலை நான்கு நாட்களுக்கு முன்னர் என் ஆய்வகத்திற்கு நேரில் வந்து தந்துவிட்டுச் சென்றார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் யார்? என்ன நூல்? என்பதினை இறுதியில் அறியத் தருகிறேன். "தலைசிறந்த மனிதநேயம்" எனும் முதல் கட்டுரை என்னை இப்படி எழுதத் தூண்டியது. எங்க கிளம்பிட்டீங்க? இருங்க கதைக்கு வருகிறேன் வாங்க... 

சரி, இப்படி சமூகம் தவறாக பேசவும் உடல்நலம் குன்றியிருந்த நாயகி மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்பவோ அப்பவோ என இறுதி நாளினை எண்ணியிருப்பவரை திருமணம் செய்வதா எனும் பெற்றோர் மற்றும் உறவுகளின் வசவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்துவிடுகிறார்.

இருபதாண்டு திருமண வாழ்வினை 26.04.2008 அன்றோடு முடித்துக்கொண்டு விடைபெற்றார். உடலுறவு கொள்வதற்கான உடல் வலிமை இன்மையால் குழந்தைகளும் இல்லை அவர்களுக்கு. புத்தகங்களோடும், காலன் அழைத்துச் சென்றவரின் நினைவுகளோடும் திருச்சி கே.கே நகரில் வாழ்ந்து வருகிறார் திருமணத்தின்மீது நாட்டமற்ற நாயகன் சரவணன் எனும் தோழர் தி.மா.சரவணன் அவர்கள்.

சரி, நூல் பற்றியும் ஆசிரியர் பற்றிய விபரம் அறியலாம் வருக...

நூல்: கிளம்பிட்டாங்கய்யா....கிளம்பிட்டாங்க

ஆசிரியர்: வி.சி.வில்வம்
(இவர் கியூபாவின் மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மீது கொண்ட ஈர்ப்பால் தன் மகளுக்கு கியூபா என பெயர் சூட்டியதோடு நில்லாமல் பெயர் சூட்டியது குறித்து பிடலுக்கு மடல் ஒன்றும் அனுப்பினார். பிடலும் பதில் மடல் ஒன்றினை அனுப்பி பெருமைப்படுத்தினார். புதுக்கோட்டையில் 2015 இல் நடாத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பில்தான் நான் ஆசிரியரை முதலில் சந்தித்து உரையாடினேன்.)
நூல் வகை: கட்டுரை
விலை: ரூ. 100/-
பதிப்பகம்: கியூபா பதிப்பகம், 41, சுருளி கோயில் 3வது தெரு, திருவெறும்பூர்,
 திருச்சி-620 013. பேச- 98424 87645.

தொடரும்...

12 comments:

  1. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . புத்தாண்டைத் துவக்குவது வாசிப்புடன் .... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி... நன்றிகள் என்றென்றும்...

      Delete
  2. அருமை...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி... தங்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

      Delete
  3. சிறப்பான பகிர்வு.... தொடர்ந்து சந்திப்போம்....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க...மகிழ்ச்சி... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      Delete
  4. Replies
    1. மகிழ்ச்சி...நன்றிகள் என்றென்றும்...

      Delete
    2. I knowvthozhar v c vilwam thrg naalaividiyum. Thanks for this bk info. With regards

      Delete
    3. மகிழ்ச்சி... நன்றிகள் அம்மா...

      Delete
  5. நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி. இந்நூலை விரைவில் வாசிப்பேன்.

    ReplyDelete